Lyricist: Mahakavi Subramaniya Bharathiyar
Agni Kunjondru Kanden | Download
மகாகவி பாரதியார்
அக்னிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
அக்னிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலொர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪
வெட்டி யடிக்குது மின்னல், - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை இடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்ட்ச்சட சட்ட்ச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டு திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா, தம்பி வீரா!
♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪.♪
அண்டம் குலுங்குது, தம்பி! - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்ப்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான் - திசை
வெற்புக் குதிக்குது; வானத்து தேவர்
செண்டு புடைத்திடு கின்றார் - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
..............................
No comments:
Post a Comment