Album: Kannan Paattu
Artist(s): Suchitra
Writer(s): Bharathiyar
Aasai Mugam Maranthu Poche | Download
கண்ணன் பாட்டு - பாரதியார்
Natalia feel about King ...♥
ஆசை முகம் மறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?
( ஆசை முகம் மறந்து போச்சே . . . )
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை;
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்
கண்ணனுரு மறக்க லாச்சு;
பெண்கள் இனத்திலிது போலே - ஒரு
பேதையை முன்பு கண்டதுண்டோ?
( ஆசை முகம் மறந்து போச்சே . . . )
கண்ணன் முகம் மறந்து போனால் - இந்த
கண்களிருந்தும் பயனுண்டோ?
வண்ண படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி
( ஆசை முகம் மறந்து போச்சே . . . )
..............................
#KingMartine
What a lovely song😍
ReplyDeleteVery nice song .இந்த பாடல் என் இதயத்தைத் தொடுகிறது.
ReplyDeleteஉயிர் உருக்கும் வரிகள் கரைந்து போனேன் கண்ணீராக
ReplyDeleteEna 1 arumaiyana padal vari vazhga em bharathi.
ReplyDeleteVazhga suchi... arumaiyana kural... idhayathi varuduvathu pola irukirathu
My ♥ touching this SONG,super Lyrick super voice and 🎶 music gandha kural
ReplyDeleteSuchi உங்க குரல் என்னை அழுகவைக்குது
ReplyDeleteஅமைதி தருது, பல விஷயங்களை மறக்க வைக்குது.. pls keep sing❤️